உன் கையே உன்னை: படித்து படித்து
நெஞ்சம் பரவித்து போனது !
நினைத்து நினைத்து
நெஞ்சம் சுமை தாங்கியது !
உன் நினைவுகளில்
நான் பசியாறிக் கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
நான் படித்து பார்த்தாலும்
புத்தும் புதிய
வரிகளாக என் இதயத்தில் நிலவதேன்னே !
சந்தோஷ கனவுகளில் என்னை
மிதக்கவைத்த நண்பரே
நானாக நானில்லை
நீ என்னுள் உருவாகி உறவானப் பின் ....!
என் நட்புடன் கலந்த உங்கள் அன்பிற்கு என்ன தவம் செய்தேன் ....
Wednesday, June 17, 2009
சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை என்றாலும்... சொல்லாமல் இருப்பதற்க்கு நிறைய இருக்கிறது...!
சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.. என்னை பற்றி அறிந்து கொண்டும் தெரிந்து கொண்டும் புரிந்து கொண்டும் பழகிட... நல்ல நட்பு வட்டம் என்னை சுற்றி இருப்பது என் பலம்...!
உருவாக்கும் பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் ஆயிரம் தடங்கல்கள்...! என்ன செய்ய நண்பனே... இருந்தும்... பயணிக்கிறேன் நீ சொன்னதற்காக...!
-------------------------
குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்..!
குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்...!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்...!
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்...!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Subscribe to:
Posts (Atom)